23rd August 2025 09:01:11 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு, ஐஎம்டப்ளியூஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட சொற்பொழிவுத் தேர்வில் சிறந்து விளங்கிய விரு கெகுலு பாலர் பாடசாலையின் 32 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவை 2025 ஆகஸ்ட் 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவ சேவை வனிதையர் பிரிவு பிரதி தலைவரும் விரு கெகுலு பாலர் பாடசாலையின் சிரேஷ்ட உறுப்பினருமான திருமதி லிலந்தி தொலகே அவர்கள் கலந்து கொண்டார்.
விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது அதைத் தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பாலர் பாடசாலை பாடல் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வரவேற்பு உரை, இராணுவ நடனக் குழுவின் நிகழ்ச்சிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல் ஆகியவை இடம்பெற்றன.
நிகழ்வின் நிறைவில் ஒரு மாணவர் நன்றியுரை ஆற்றியதுடன் குழு படம் மற்றும் தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.