Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st August 2025 08:31:10 Hours

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம்

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி அஜந்த டி சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் 2025 ஆகஸ்ட் 16 அன்று அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், அங்குள்ளவர்களுக்கு பரிசுப் பொதிகளையும், நலவிடுதிக்கு அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினர். பின்னர், மதிய விருந்தும் வழங்கியதுடன் அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விஜயத்தில் இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.