Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

15th August 2025 12:38:03 Hours

மின்னேரியா - மஹாரத்மலை, ஸ்ரீ ஆனந்தராமயவில் 7 வது இலங்கை இலகுரக பீரங்கி படையினரால் சமூக சேவை

7 வது இலங்கை பீரங்கி படையணி, இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களின் முன்முயற்சி மற்றும் மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மின்னேரியாவில் உள்ள ஸ்ரீ ஆனந்தராமய விகாரையின் மஹாரத்மலேயில் நீண்டகால தேவையாக காணப்பட்ட துறவிகள் வாசஸ்தல கட்டுமானத்தை ஆரம்பித்தது. இந்தத் திட்டம் கிராமவாசிகளின் பங்களிப்பு மற்றும் திருமதி ஷெர்னிசாமா விஜேசிங்க அவர்களின் நிதியுதவியுடன், அவரது மறைந்த கணவர் திரு. ஷெல்டன் ஜயசூரிய அவர்களின் நினைவாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சி 2025 ஆகஸ்ட் 07 ஆம் திகதி தர்ம பிரசங்கத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து அன்னளவாக 350 பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. மறுநாள், மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அத்துடன் விகாரையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டன. 7 வது இலகுரக பீரங்கி படையினர் சமூக சேவை மற்றும் மத நல்லிணக்கத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்துவதில் பங்காற்றினர்.

இந்நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பீ.பீ. குலதிலக்க என்டிசீ, பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.ஜி.ஐ.ஏ. அரியரத்ன ஆர்எஸ்பீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், கிராமவாசிகள் மற்றும் நன்கொடையாளரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். இது ஓர் அர்த்தமுள்ள மற்றும் நன்கு ஆதரிக்கப்பட்ட சமூக முயற்சியாக அமைந்தது.