Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th August 2025 15:03:23 Hours

இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் உயிர்நீத்த வீரர்களுக்காக தானம் வழங்கல்

இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் நாட்டின் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த திருமணமாகாத இலங்கை இலோசாயுத காலாட் படையணி போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஓகஸ்ட் 01 அன்று அனுராதபுரம் அட்டமஸ்தானத்தில் (8 வணக்கத்துக்குரிய இடங்கள்) தான நிகழ்வை நடத்தியது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார்.

அபயகிரி விகாரையில் உயிர்நீத்த போர் வீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் தானம் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் 2025 ஓகஸ்ட் 02 அன்று அட்டமஸ்தானத்திற்கு யாத்திரை மேற்கொண்டனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.