07th August 2025 15:01:02 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இலங்கை சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி அவர்களுக்கு கட்டுகஸ்தோட்டையில் ஒரு புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2025 ஜூலை 31 அன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் பிரதி சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.