07th August 2025 09:39:24 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூலை 30 அன்று குருநாகல் அபிமன்சல 3 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவ் விஜயத்தின் போது இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 32 போர் வீரர்களின் நலனுக்காக சுமார் ரூ. 200,000.00 மதிப்புள்ள பத்திக் ஆடைகளை நன்கொடையாக வழங்கினர். தேநீர் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.