Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th August 2025 09:37:59 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் கொமாண்டோ படையணி படையினரின் கர்ப்பிணி துணைவியர்களுக்கு நன்கொடை

கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் பிரிவின் உறுப்பினர்களால் 2025 ஜூலை 27 அன்று கணேமுல்ல படையணி தலைமையகம், 1 வது கொமாண்டோ படையணி, 4 வது கொமாண்டோ படையணி, 2 கொமாண்டோ படையணி மற்றும் 3 கொமாண்டோ படையணி மற்றும் கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை படையினரின் கர்ப்பிணி துனைவியர்களுக்கு தொடர்ச்சியான நலத்திட்டங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வு கணேமுல்ல படையணி தலைமையக வளாகத்தில், கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 1 வது கொமாண்டோ படையணி மற்றும் 4 வது கொமாண்டோ படையணி பங்கேற்புடன் நடைபெற்றது. இம் முயற்சி 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் ஊடாக, ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் ஒரு மகப்பேறு பரிசுப் பொதி வழங்கப்பட்டது.