07th August 2025 09:36:22 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 ஓகஸ்ட் 03 அன்று குருநாகல் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சமூக சேவையின் ஒரு பகுதியாக, ரூ. 200,000.00 பெறுமதியான ஒரு நோயாளி தள்ளுவண்டி மற்றும் ஒரு ஆடை (அலங்கார) தள்ளுவண்டி அடங்கும். இந்த உபகரணங்கள், மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக பயன்படுவதோடு நல்வாழ்வை மேம்படுத்துவதாகும்.
நன்கொடை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கெமுனு ஹேவா படையணி இசைக்குழுவால் மனதை அமைதிப்படுத்தும் இசை அமர்வு நடத்தப்பட்டது. மேலும் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்களால் நோயாளர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே. விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.