Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th August 2025 15:33:37 Hours

ரணவிரு மவ்பியா வந்தனா - 2025 (நிலை II) நினைவு விழா கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவினரால் ஏற்பாடு

கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவினரால் ஏற்பாட்டில் ரணவிரு மவ்பியா வந்தனா - 2025 (நிலை II) நினைவு விழா 2025 ஜூலை 27, அன்று கெமுனு ஹேவா தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் மேற்பார்வையில், காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே. விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

நிகழ்வு படையணி தலைமையக விகாரையின் ஒரு தர்ம பிரசங்கத்துடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து போர் வீரர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க அவர்கள், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் பெற்றோர் செய்த விலைமதிப்பற்ற தியாகத்தை வலியுறுத்தி சிறப்பு உரை நிகழ்த்தினார். உரையைத் தொடர்ந்து, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, விருந்தினர் பேச்சாளருக்கு பாராட்டுச் சின்னம் வழங்கினார்.

பின்னர், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி படையணி விளையாட்டு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கவீனமுற்ற லான்ஸ் கோப்ரல் யூஜி சரத் அவர்களுக்கு சக்கர நாற்காலியை வழங்கினார். பின்னர், பங்கேற்பாளர்களுக்கு , கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

பெற்றோரின் பிரச்சினைகளைக் கேட்கவும் தேவையான ஆதரவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட உதவி நிலைய அமர்வோடு நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இறந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.