02nd August 2025 08:56:00 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஸ்வேந்திரினி திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 68 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சி 2025 ஜூலை 31 அன்று, இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் பிற அழைக்கப்பட்ட விருந்தினர்களால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. 68 மாணவர்களுக்கும் இராணுவ சேவை வனிதையர் பிரிவால் மொத்தம் ரூ. 6,800,000.00 ஒதுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 100,000.00 வழங்கப்பட்டது.
புலமைப்பரிசில்கள் வழங்கலை தொடர்ந்து, புலமைப்பரிசில் பெற்றவர்களில் ஒருவர் இராணுவ சேவை வனிதையர் பிரிவிற்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
மேலும், 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒரு சிப்பாயின் வீட்டை நிர்மாணிப்பதற்கு ரூ. 1,500,000.00 பங்களிப்பு செய்யப்பட்டது. மூன்று சேவை செய்யும் மூன்று இராணுவ வீரர்களுக்கு ரூ. 450,000.00 மதிப்புள்ள வீட்டு மானியங்கள் வழங்கப்பட்டதுடன் அதே நேரத்தில் இரண்டு சிவில் ஊழியர்களுக்கு ரூ. 300,000.00 வீட்டு மானியங்கள் வழங்கப்பட்டன.
மேலும், இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 100,000.00 வழங்கப்பட்டதுடன், ஒன்று ஒரு இராணுவ வீரரின் நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியின் சிகிச்சைக்காகவும், மற்றொன்று ஒரு இராணுவ வீரரின் மகனின் கண்டறியப்பட்ட நோயின் சிகிச்சைக்காகவும் வழங்கப்பட்டது.
மேலும், 11வது இலங்கை பீரங்கிப் படையணியை சேர்ந்த ஒரு சிப்பாய்க்கு தனது மூன்றுகுழந்தைகளுக்கு பால் பொதிகள் வாங்க ரூ. 144,000.00 வழங்கப்பட்டது.
முந்தைய மாதாந்த சேவை வனிதையர் பிரிவின் கூட்டங்களின் போது, முதல் கட்ட வீட்டு மானியங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த வீட்டுத் திட்டங்களின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டு வீரர்களுக்கு தலா ரூ. 150,000.00 வழங்கப்பட்டதுடன் மேலும் இரண்டு சிவில் ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகளின் மீதமுள்ள பணிகளை முடிக்க தலா ரூ. 150,000.00 வழங்கப்பட்டது. மேலும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல்படையணியில் பணியாற்றும் ஒரு போர் வீரருக்கு வீட்டு நிர்மாணிப்பு உதவிக்கான இரண்டாவது தவணையாக ரூ. 200,000.00 வழங்கப்பட்டதுடன் அதே நேரத்தில் ஊடக மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் ஒரு சிவில் ஊழியர் தனது வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 100,000.00 பெற்றார்.
உதவித்தொகை மற்றும் நிதி உதவி வழங்கலை தொடர்ந்து, பெறுநபர்கள் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைத்து வருகையாளர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.