02nd August 2025 09:04:32 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், போர்வீரர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினரால் 2025 ஜூலை 30, அன்று தியதலாவ தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையில் அங்கவீனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான ஆறாவது கட்ட மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஊவா மாகாணத்தில் வசிக்கும் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் 2,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர், இதில் அங்கவீனமுற்றோர், ஓய்வு பெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக வெ ளியேறி ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் தற்போது மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர். இந்த திட்டத்தின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் நிகழ்விற்கு இணையாக ஒரு கண் மருத்துவ சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 350 முக்குகண்ணாடிகள் மற்றும் 20 சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.