30th July 2025 09:10:30 Hours
1997 டிசம்பர் 4 ஆம் திகதி மன்னங்குளம் பிரதேசத்தில் ஜயசிகுரு நடவடிக்கையின் போது வீரமரணமடைந்த 2 வது கொமாண்டோ படையணியின் லெப்டினன் எம்.பீ. டி சில்வா அவர்களின் தாயாருக்கு ஆதரவாக, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஒரு சக்கர நாற்காலி மற்றும் உலர் உணவுப் பொதி நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த முயற்சி 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதயுமான மேஜர் ஜெனரல் கே.எஸ்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.