Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th July 2025 15:55:51 Hours

சீமாட்டி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சேவை வனிதையர் பிரிவினால் நன்கொடை

பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) ரசிக்க பெரேரா அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 2025 ஜூலை 26 ஆம் திகதி நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், இராணுவ சேவை வனிதையர் பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ஒருங்கிணைப்பாளர் கேணல் எம்.எம்.ஆர். சந்திரசேகர அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 9 மில்லியன் பெறுமதியான மூன்று படுக்கைகளை நன்கொடையாக வழங்கினார். இது மருத்துவமனையின் முக்கிய தேவையை பூர்த்தி செய்தது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.