25th July 2025 12:02:08 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஜூலை 19 ஆம் திகதி மஹா ஓயா, கெகிரிஹேனவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவியை கெமுனு ஹேவா படையிணியின் சிவில் ஊழியரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்தது.
காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே. விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவியில், 12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் குடும்பத்திற்கு தேவையான தளபாடங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் 12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.