16th July 2025 09:05:47 Hours
புனர்வாழ்வு பெறும் போர் வீரர்களின் உடல உள நலனை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கம்புருபிட்டிய அபிமன்சல-2 க்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களுடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, போர்வீரர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஒரு ஒலி அமைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பொழுதுபோக்கு அம்சத்தினை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.