16th July 2025 13:40:36 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூலை 11 ஆம் திகதி கிளப்பன்பேர்க்கில் வீட்டு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு நடாத்தப்பட்டது.
தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை நிர்வகிப்பது பற்றிய நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயலமர்வை பிரிகேடியர் ஜீ.ஆர்.எஸ். தர்மரத்ன யூஎஸ்பீ அவர்கள் நடாத்தினார். ஆரோக்கியமான குடும்ப உறவு மற்றும் நிதி திட்டமிடல் ஆகிய முக்கிய தலைப்புகளில் செயலமர்வு நடாத்தப்பட்டது.