Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd July 2025 18:48:10 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரால் பிள்ளைக்கு மருத்துவ உதவி

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு, 2 வது இலங்கை சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரியின் பிள்ளைக்கு ஆதரவளிக்கும் நிமித்தம் 2025 ஜூலை 18 ம் திகதி அன்று விஜயம் மேற்கொண்டது. அப்பிள்ளைக்கு பல உடல்நலக் குறைபாடுகள் இருப்பதினாலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், ராஜகிரிய குழந்தை கண் மருத்துவமனை வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அதற்கான அனைத்து செலவுகளும் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.