23rd July 2025 18:46:11 Hours
7 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி 2025 ஜூலை 05, அன்று அதுருகிரிய படையலகு வளாகத்தில் பரிசு வவுச்சர் வழங்கும் நிகழ்வை நடாத்தியது. இந்த நலத்திட்டத்தில் படையணியில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகள் பயனடைந்தனர்.
இந்த நிகழ்வின் போது பணியாற்றும் பணியாளர்களின் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பிள்ளைகள் பரிசு வவுச்சர்களை பெற்றனர். இந்த முயற்சி 7 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூசீ பெரேரா யூஎஸ்பீ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.