23rd July 2025 18:44:23 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 8வது இலங்கை இராணுவ சேவைப் படையணி வளாகத்தில் 2025 ஜூலை 19, அன்று பாடசாலை பொருட்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் பணியாற்றும் 25 சிப்பாய்கள் மற்றும் 10 சிவில் ஊழியர்களின் பிள்ளைகள் பயனடைந்தனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.