Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

22nd July 2025 19:27:43 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம் ஏற்பாடு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு, அதன் தலைவி திருமதி இரோஷி பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கர்ப்பிணி பணியாளர்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் 2025 ஜூலை 19 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் ஒரு நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முயற்சியில் சத்துணவு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை வழங்கியது.