22nd July 2025 15:27:40 Hours
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஜூலை 16 ஆம் திகதி 6 வது இலேசாயுத காலாட் படையணியின் வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அதன் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டியது.
இந்த நலன்புரி முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவி மற்றும் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரின் மனிதவளத்துடன் வீட்டின் கட்டுமானம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
வீடு திறப்பு விழாவின் போது, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி புதிய வீட்டின் சாவியை பயனாளியிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.