21st July 2025 16:22:15 Hours
திம்புலாகல ஸ்ரீ மஹா காசியப்ப தர்ம பாடசாலை, திம்புலாகல பிரிவேனா மற்றும் திம்புலாகல காசியப்ப மகா வித்தியாலயத்தில் கற்கும் 176 புதிய துறவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் 2025 ஜூலை 20 அன்று திம்புலாகல ரஜ மகா விஹாரையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் ரூ. 7,500.00 பெறுமதியான பாடசாலை பைகள், புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை சீருடை வவுச்சர்கள் என்பன வழங்கப்பட்டன.
மேலும், அதே நிகழ்வின் போது இராணுவத் தளபதியால் கல்லூரியின் 23 ஊழியர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.