18th July 2025 13:56:17 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் மேற்பார்வையில் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரவாணையற்ற அதிகாரி அவர்களின் வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு 2025 ஜூலை 13 அன்று 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு சிரேஷ்ட உறுப்பினர்களால் அதிகாரப்பூர்வமாக சிப்பாயிடம் ஒப்படைக்கப்பட்டது.