Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

18th July 2025 13:52:21 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் போர் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் 2025 ஜூலை 17 அன்று இராணுவ சேவை வனிதையர் பிரிவு வளாகத்தில் சக்கர நாற்காலி நன்கொடை வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இராணுவத் தளபதி நன்கொடைத் திட்டத்தைத் ஆரம்பித்து மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்ற இரண்டு போர் வீரர்களுக்கு, அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தலா ரூ.700,000.00 மதிப்புள்ள இரண்டு மின்சார சக்கர நாற்காலிகளை வழங்கினார். ஒருவர் 8 வது கஜபா படையணியை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரவாணையற்ற அதிகாரி ஆவார், அவர் 2009 மார்ச் 28 அன்று புதுக்குடியிருப்பில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களால் இரண்டு கால்களையும் இழந்தார். மற்றொருவர் 9 வது இலங்கை சிங்க படையணியை சேர்ந்த ஒரு சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஆவார், அவர் 2000 செப்டம்பர் 17, அன்று யாழ்ப்பாணத்தின் சரசாலையில் பயங்கரவாதிகளின் மோட்டார் தாக்குதலின் விளைவாக வலது கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு உடலின் இடது பக்கம் செயலிழந்தவர்.

மேலும், இராணுவ தலைமையகத்தில் நடக்க முடியாத ஒரு பணி உதவியாளரின் மாமனாருக்கும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட இராணுவ செயலாளர் கிளையின் சிவில் ஊழியஊழியரின் தாயிற்குஇராணுவ சேவை வனிதையர் பிரிவினால் சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.