17th July 2025 09:58:11 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிரோஷிகா கருணாபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஜூலை 12 ஆம் திகதி காலி, கராப்பிட்டியவில் உள்ள இலங்கை புற்றுநோய் சங்க கிளையில் நன்கொடை வழங்கும் திட்டத்தை நடாத்தியது.
இந்த நிகழ்வின் போது, கராப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் நலனுக்காக ரூ. 200,000.00 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அனைத்து நன்கொடைகளும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கட்டளையின் கீழுள்ள படையலகுகளினால் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.