14th July 2025 16:31:05 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூலை 10 அன்று நன்கொடை திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டம் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் 10 வது சமிக்ஞை படையணியில் இணைக்கப்பட்ட ஒரு சிவில் பணியாளரின் மனைவிக்கு ஆதரவளித்தது. இந்த சவாலான காலகட்டத்தில் குடும்பத்தின் சுமையைக் குறைக்க இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினர் ரூ. 15,000.00 பெறுமதியான நிதி உதவியையும், சத்தான உணவுப் பொருட்களையும் வழங்கினர். குழுவினர் நோயாளரை சந்தித்து, அவரது உடல்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.