07th July 2025 15:27:11 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி அஜந்தா டி சில்வா அவர்கள் 2025 ஜூலை 02 ஆம் திகதி இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
பின்னர், புதிய தலைவி தனது திட்டங்களை பகிர்ந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மேலும் வீரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வை மையமாகக் கொண்ட எதிர்காலத் திட்டங்களையும் எடுத்துக் காட்டினார்.
இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.