Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

08th July 2025 22:19:10 Hours

ஹிங்குரக்கொடையில் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது இலேசாயுத காலாட் படையணியின் படையினர் ஹிங்குரக்கொடையில் வறிய குடும்பத்திற்கான வீடு கட்டும் திட்டத்தைத் ஆரம்பித்தனர். தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க 2025 ஜூலை 04 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திருமதி. சொய்சா வீரவர்தன அவர்கள் தனது மறைந்த கணவர் திரு. பிரீத்தி வீரவர்தன அவர்களின் நினைவாக வழங்கிய நன்கொடை மூலம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.