02nd July 2025 15:56:28 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு ஜூன் 2025 இல் பல நலன்புரி திட்டங்களை மேற்கொண்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, கொட்டாவ ஆனந்த கல்லூரியின் 1,500 பாடசாலை மாணவர்களுக்கு 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் உதவியுடன் பால் தேநீர் விநியோகிக்கப்பட்டது. மேலும், அபேக்ஷா மருத்துவமனைக்கு ரூ. 70,000.00 மதிப்புள்ள மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் மேலும் மூன்று உள்நோயாளிகளுக்கு மருந்துகளை வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.