30th June 2025 22:28:12 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 ஜூன் 22 அன்று பொல்ஹென்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நன்கொடை நிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவை நடத்தியதுடன் அதைத் தொடர்ந்து அதன் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, திரு. ஸ்ரீயால் டி சில்வா மற்றும் திருமதி. நிலக்ஷி டி சில்வா ஆகியோர் பல முக்கிய நலத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கியதுடன் இதில் அங்கவீனமுற்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிப்பாயின் வீடு கட்டுவதற்கு ரூ. 1 மில்லியன், அதிகாரவாணையற்ற அதிகாரியின் மனைவிக்கு மருத்துவ உதவி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் நடத்தப்படும் பிற வரவிருக்கும் திட்டங்களுக்கு ஆதரவு ஆகியவை உள்ளடங்கும்.
அன்றைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, மனிதவளம், உந்துதல் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு குறித்த ஆலோசகர் திருமதி. சுரணி வெட்டசிங்க அவர்கள் தனிப்பட்ட பிராண்டிங் குறித்த ஒரு ஈர்க்கக்கூடிய அமர்வை நடத்தினார்.
இலங்கை இராணுவத்தின் இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.எல்.ஜே.எஸ். பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.