30th June 2025 16:14:03 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்தின்படி 2025 ஜூன் 27 அன்று கண்டியில் உள்ள இராணுவத் தள மருத்துவமனையில் ஐந்தாவது கட்டமாக கிட்டத்தட்ட 2,000 ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முயற்சி மத்திய மாகாணத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரனி ரொட்ரிகோ அவர்களுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவால் 20 சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் அதே நேரத்தில் ரொட்டரி கழகம் 02 சக்கர நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியது. மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் சிங்க கழகத்தின் ஒருங்கிணைப்புடன் பல் மற்றும் கண் மருத்துவ சிகிச்சைகளும் நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.