27th June 2025 15:21:13 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜூன் 21 அன்று பனாகொடை இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் நவீன மின்சார சமையல் உபகரணங்கள் தொடர்பான தகவல் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சீ வழங்கிய அனுசரணையுடன் சமையல்காரர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் திருமதி துஷாந்தி மதநாயக்க இந்த அமர்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சி இராணுவ குடும்பங்களுக்கு, குறிப்பாக சேவை செய்யும் பணியாளர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது துணைவியர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.