Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

27th June 2025 15:11:25 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரால் மருத்துவத் தேவையுடைய குழந்தைக்கு நிதியுதவி

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் கடுமையான இதய நோயால் போராடும் ஒரு குழந்தைக்கு 2025 ஜூன் 24, அன்று நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் குழந்தையின் மருத்துவத் தேவைகளை ஆதரிப்பதற்காக ரூ. 15,000 க்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டது, அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை மற்றும் ஐந்து நரம்பியல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் மற்றொரு முக்கியமான அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விஜயத்தின் போது, இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பிள்ளையின் நிலை தொடர்பாக விசாரித்து, குடும்பத்தினருக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.