25th June 2025 15:54:56 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் "சேவை வனிதையர் சிசு அபிமான் - 2025" உதவித்தொகை வழங்கும் விழாவை 2025 ஜூன் 22, அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையக பெரடைஸ் மண்டபத்தில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதயர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தியது. இந்த நிகழ்வு கெமுனு ஹேவா படையணி பணியாளர்களின் பிள்ளைகளின் கல்வி திறனை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நிகழ்ச்சியின் போது க பொ த உயர்தர பரீட்சை 2024 இல் மூன்று "ஏ" சித்திகளைப் பெற்று சிறந்து விளங்கிய ஆறு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட்டுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே. விமலரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.