Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th June 2025 16:00:44 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நன்கொடை திட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ வீரர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் 2025 ஜூன் 24 அன்று ஒரு நன்கொடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, இராணுவத் தளபதி, 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மெரிடியன் தெரபி இயந்திரத்தை, முன்னாள் படைவீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். அபிமன்சல நலவிடுதியின் நரம்பியல் சிகிச்சை பெறும் போர் வீரர்களின் நலனுக்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் ஒருங்கிணைப்பில் சீன நாட்டவரான திரு. ஓங் வீ யென் அவர்களின் நன்கொடையினால் வழங்கப்பட்டது.

ஆவுஸ்திரேலியாவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட வலைபந்தாட்ட போட்டியில் பங்கேற்க உள்ள மறைந்த மேஜர் எம்.ஜி. விஜேசேன அவர்களின் மகளுக்கு உதவும் வகையில் ரூ. 100,000.00 நன்கொடை வழங்கப்பட்டது. மேலும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை ஆதரிப்பதற்காக இரத்தினபுரி கெஹெலோவிட்ட வித்யாலயத்திற்கு ஒரு டெஸ்க்டாப் கணினி நன்கொடையாக வழங்கப்பட்டது, ஏனெனில் பாடசாலையில் அத்தகைய வசதிகள் இல்லை.

வீடு கட்டுவதற்கான ஆரம்ப தவணையாக அபிமன்சல 1 நலவிடுதியில் வசிக்கும் ஒரு போர்வீரருக்கு ரூ. 400,000.00 நிதி உதவி வழங்கப்பட்டது. பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் சிவில் ஊழியர் ஒருவருக்கு ரூ. 200,000.00 வழங்கப்பட்டது.

மேலும், இராணுவ வீரர்களின் ஐந்து பிள்ளைகளுக்கு அவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்காக தலா ரூ. 100,000.00 வழங்கப்பட்டது. 5 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரியின் முன்று பிள்ளைகளுக்கு பால் பொதிகள் வாங்க ரூ. 144,000.00 நன்கொடை வழங்கப்பட்டது.

வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், சிப்பாய்க்கு ஒருவருக்கு ரூ. 200,000.00, மூன்று இராணுவ வீரர்களுக்கு ரூ. 150,000 மற்றும் ரூ. ஒரு அரச ஊழியருக்கு 100,000 ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது.