Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd June 2025 16:39:43 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்கள் 2025 ஜூன் 03 ஆம் திகதி தனது பதவியிலிருந்து விடைபெற்றார்.

இந்த நிகழ்வின் போது, தற்போது 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் மகனுக்கு, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நடைபெறவிருக்கும் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைக்காக ரூ. 165,000.00 நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் (கொழும்பு) பணியாற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரியின் மகள் நெத்துமினி உமாஷா ரத்சரணியின் சிறந்த விளையாட்டு சாதனைகளைப் பாராட்டும் வகையில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அவர் சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வெற்றி பெற்றார்.