Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

20th June 2025 17:45:04 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனியைரால் வீரமரணமடைந்த போர் வீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு

கெமுனு ஹேவா படையணி சேவை வனியைர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வீரமரணமடைந்த போர் வீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் வகையில் 2025 ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் "ரணவிரு மாவ்பியவந்தனா - 2025" என்ற சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது, பெற்றோர்கள் ஸ்ரீ மகா போதியில் வழிப்பாடுகளை மேற்கொண்டதுடன், ருவன்வெலி மகா சேயாவில் தர்ம பிரசங்கத்தில் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து கஜபா படையணி தலைமையகத்தில் நினைவு விழா நிகழ்வு நடைபெற்றது. ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக, துபாராமய மற்றும் ஜேதவனராமயவிற்கும் விஜயம் மேற்கொண்டனர்.

நிகழ்வில் இதயப்பூர்வமான வீடியோ அஞ்சலி, நினைவுப் பரிசுகள் வழங்கல் மற்றும் பெற்றோரின் துன்பங்களை நிவர்த்தி செய்வதற்கான உதவி நிலைய அமர்வு ஆகியவை அடங்கியிருந்தது.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே. விமலரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.