20th June 2025 17:40:38 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதி ‘சிங்ஹ திரிய பியச’ விற்கு விஜயம் மேற்கொண்டார். மாற்றுத்திறனாளி வீரர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, தலைவி உற்பத்தி பொருட்களை பார்வையிட்டதுடன், கறுவா பட்டை பொருட்கள், காலணி உற்பத்தி, புத்தக வெளியீடுகள், மர வேலைப்பாடு, தையல், சிமென்ட் சார்ந்த பொருட்கள், சிற்றுண்டிச்சாலை மற்றும் சுவரோவிய கலைப்படைப்புகள் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்கினார்.