Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

22nd May 2025 15:32:40 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் அனுராதபுரம் அபிமன்சல 1 நலவிடுதிக்கு விஜயம்

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 17 அன்று கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினர் அனுராதபுரம் அபிமன்சல 1 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் இநி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு போர் வீரர்களின் நல்வாழ்வு மற்றும் மீட்பு செயல்முறை தொடர்பாக கலந்துரையாடினார். பின்னர், பிரதம விருந்தினர், கொமாண்டோ படையணி ஏனையவர்களுடன் இணைந்து போர் வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்தில் பங்கேற்றனர்.