Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th June 2025 08:34:47 Hours

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதைரால் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு போசன் போயா தினத்துடன் இணைந்து விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஊனமுற்ற வீரர்களின் பயன்பாட்டிற்காக 10 சக்கர நாற்காலிகளை கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு, நன்கொடையாக வழங்கியது.

பிரிகேடியர் தனில்கா பெரேரா (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வேண்டுகோளின் பேரில், செனுரா நிறுவனத்தின் திரு. வீரசிறி சுரனிமல இந்த சக்கர நாற்காலிகளுக்கு நிதியுதவி வழங்கினார்.