04th June 2025 17:50:09 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷ் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், முல்லைத்தீவு படை அதிகாரி கட்டளை படையினருடன் இணைந்து, 2025 மே 30 ஆம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள சிறுவர் இல்லத்தில் ஒரு நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மதிய உணவு வழங்கப்பட்டதுடன், சிறுவர்களின் அன்றாட பயன்பாட்டிற்காக அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இல்லத்திலுள்ள சிறுவர்களின் உற்சாகத்தை மேம்படுத்தும் பொழுதுபோக்கு நிகழ்வும் இடம்பெற்றது.
இலங்கை இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.