05th June 2025 12:47:58 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போர் வீரர்களின் பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் 2025 ஜூன் 04, நன்கொடை வழங்கும் திட்டம் நடத்தப்பட்டது..
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். திருமதி சுபாஷினி வீரசிங்க வழங்கிய நிதியுதவி மூலம் இந்த முயற்சி சாத்தியமானது.
இந்த நிகழ்வின் போது, 2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் சிறந்து விளங்கிய இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ஆறு மடிக் கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், தற்போது மருத்துவ பீடத்தில் தனது கற்றலை தொடரும் ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற போர் வீரரின் மகளுக்கு ஒரு மடிக்கணினி நன்கொடையாக வழங்கப்பட்டது..