Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd June 2025 15:28:38 Hours

விஷேட படையணி சேவை வனிதையரால் நன்கொடை நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு

வவுனியா மடுகந்த மகாமைலங்குளம் விரு முத்து பாலர் பாடசாலையில், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு 3 வது விஷேட படையணியுடன் இணைந்து, விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மகாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 31 ஆம் திகதி நன்கொடை வழங்கும் திட்டத்தை நடாத்தியது.

வவுனியா மாவட்டத்தின் இந்த கிராமத்திலுள்ள பிள்ளைகளின் கல்வித் தேவைகளை ஆதரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சியில் ரூ. 75,000.00 பெறுமதியான பாடசாலை பைகள், தண்ணீர் போத்தல்கள், குடைகள் மற்றும் ஏனைய எழுதுபொருட்கள் அடங்கியிருந்தன.

பாலர் பாடசாலையின் பிள்ளைகளின் நடன நிகழ்ச்சிகள் நிகழ்வை வண்ணமயமாக்கியது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்துபசாரம் வழங்கியதுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.