31st May 2025 15:41:16 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மதுவந்தி அம்பன்பொல அவர்களுன் வழிகாட்டுதலின் கீழ், திஸாவேவவில் 2025 மே 24 ஆம் திகதி நலன்புரி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியில் பணியாற்றும் 68 சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மதிய உணவோடு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.