31st May 2025 15:37:02 Hours
இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்.ஜி. சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 மே 28 ஆம் திகதி அபிமன்சல 3 நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் போர் வீரர்களுக்கு தேநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
பின்னர், இசை நிகழ்ச்சி நடைபெற்றதுடன், அனைத்து பங்கேற்பாளர்களும் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தலைவி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.
இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.