23rd May 2025 20:41:02 Hours
16வது தேசிய போர்வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத வழிப்பாடு மற்றும் கற்றலில் ஈடுபட்டுள்ள 75 புதிய பிக்குகளுக்கு கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நன்கொடையைத் தொடர்ந்து 2025 மே 18 அன்று குருநாகல் ஸ்ரீ சங்கராஜ பிரிவேனாவில் தானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, இறந்த போர் வீரர்களின் ஆத்மா சாந்திக்காகவும், அங்கவீனமுற்ற போர் வீரர்கள் விரைவாக குணமடையவும், தற்போது புற்றுநோய் மற்றும் வேறு நோய்களால் போராடும் இலங்கை பாதுகாப்பு படை வீரர்களின் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.