22nd May 2025 15:36:03 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மே 16 இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிவில் ஊழியருக்கு புதிதாக கட்டப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது.
இந்த கட்டுமானப் பணிகள் 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டன, அதே நேரத்தில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.