Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd May 2025 20:38:22 Hours

சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளின் மனைவியருக்கு இராணுவ சேவை வனிதையரால் தேநீர் விருந்து

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 80வது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின், 2025 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளின் மனைவியருக்கு 2025 மே 21 அன்று கொழும்பு கிராண்ட் மைட்லேண்டில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக குழுவினரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் முடிவில், வருகை தந்த விருந்தினர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் விமானப்படை சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.