Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st May 2025 21:34:35 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரின் நன்கொடைத் திட்டம்

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சமூக நல திட்டம் 2025 மே 15 படையணி தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவக் குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சமிக்ஞை படையணி பணியாளர்களின் மகள்களுக்கு ஆடைகள் விநியோகிக்கப்பட்டன.

2025 மே 09 அன்று, இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சமீபத்தில் இடுப்பு குடலிறக்கம் சிகிச்சை செய்த தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை பெல்ட் வாங்க அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும் 2025 மே 14, அன்று, ஹொரணையில் வசிக்கும் 4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு ரூ. 10,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது, அவரது நான்கு மாத மகன் தற்போது நுரையீரல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தாயில்லா இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் 2 வது (தொ) சமிக்ஞை படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு 40 பால் மா பாக்கெட்டுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அதே நாளில்,மீகொடவில் வசிக்கும் 11வது இலங்கை சமிக்ஞை படையணியின் சிவில் ஊழியரின் மனைவி நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தை ஆதரிப்பதற்காக 10,000 ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.