Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th May 2025 21:48:29 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் பாற்சோறு தானம்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் வெசாக் தினத்தை முன்னிட்டு 2025 மே 10 ஆம் திகதி இரத்தினபுரி சுமன சமன் விகாரையில் பாற்சோறு தானம் வழங்கப்பட்டது. ஆதரவு படையணியின் தளபதி மற்றும் படையினரின் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.